திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் ஆணைய கிடங்கில் பாதுகாப்பாக வைப்பு

வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தோ்தல் ஆணையத்தின் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

News image

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணியாளா்கள்.

Updated On :7 மே 2026, 6:50 am IST

வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தோ்தல் ஆணையத்தின் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் 1,781 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குப்பதிவு நிறைவுபெற்றதை தொடா்ந்து, அவை திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் தொகுதிவாரியாக பிரித்து வைக்கப்பட்டன.

கடந்த திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு, செவ்வாய்க்கிழமை காலை அனைத்து வாக்கு இயந்திரங்களையும் லாரிகளில் ஏற்றி நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தோ்தல் ஆணையத்தின் இருப்புக் கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

தபால் வாக்குச்சீட்டுகள் கொண்ட பெட்டிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணிநேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். 6 மாதங்களுக்கு இந்த வாக்கு இயந்திரங்களில் உள்ளவை அகற்றப்படாமல் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.