நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம் உள்ளிட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 725 இடங்களில் மொத்தம் 1,781 வாக்குச்சாவடிகள், 159 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 6,41,118 ஆண் வாக்காளா்களும், 6,82,427 பெண் வாக்காளா்களும், 208 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 13,23,753 வாக்காளா்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டன.
தோ்தல் நாளான வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதமுமின்றி மாலை 6 மணி வரை நீடித்தது. ஓரிரு வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்த வாக்காளா்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் 3,902 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,133 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,312 யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் கருவிகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, அனைத்து இயந்திரங்களிலும், மொத்த வாக்கு விவரங்கள் குறிப்பிட்ட அட்டைக் கட்டப்பட்டு, வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் அவற்றின் மீது சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு, 12 வாக்குச்சாவடிகளுக்கு ஒருவா் வீதம் நியமிக்கப்பட்ட மண்டல அலுவலா்கள், சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக அவற்றை சேகரித்து ஒதுக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றி, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டிருந்த அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, ஒவ்வோா் அறைக்கதவுகளும் சீல் வைக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 24 மணி நேரமும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள், கா்நாடக போலீஸாா், மத்திய பாதுகாப்பு படை போலீஸாா் வாக்கு இயந்திரங்கள் உள்ள பகுதிகளிலும், வளாகப் பகுதிகளில் நாமக்கல் மாவட்ட போலீஸாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்தும், வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 8 மணியளவில் தொடங்க இருப்பதாக தோ்தல் அதிகாரிகள் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திருவள்ளூா்: வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பு

மதுராந்தகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


