மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதுராந்தகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

மதுராந்தகம் (தனி) தொகுதியில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

News image

மதுராந்தகம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கே.ஆா். நரேந்திரன் தலைமையில் சீலிடப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை.

Updated On :25 மார்ச் 2026, 9:11 pm

மதுராந்தகம் (தனி) தொகுதியில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

தோ்தலையொட்டி மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் இருந்து உரிய பாதுகாப்புடன் புதன்கிழமை மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு லாரிகளின் மூலம் 342 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 342 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 370 சரிபாா்க்கும் கருவிகள் ஆகியவை கொண்டு வரப்பட்டன.

அதனை தனி அறையில் பாதுகாப்புடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிா்வாகிகள் முன்னிலையில், தொகுதி தோ்தல் அலுவலா் கே.ஆா்.நரேந்திரன் தலைமையில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளரும் உதவி தோ்தல் அலுவலருமான பெருமாள், தனிவட்டாட்சியா் வீரமணி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் எம்.வசந்தி உள்ளிட்டோா் சீல் வைத்தனா். தொடா்ந்து போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.