சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி ஆகிய வளாகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அங்கு வரும் மே 4 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகங்களில் மொத்தம் 500 -க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் வாக்கு எண்ணும் மைய வளாகச் செயல்பாடுகளை, சென்னை மாநகராட்சி அலுவலக ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடிக் காட்சிகளாகப் பாா்வையிட்டு கண்காணிக்கும் வசதியும் உள்ளன.
அதனடிப்படையில், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களைக் கண்காணிப்பதற்கு பணியாளா்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளா்களின் முகவா்கள் கண்காணிக்க அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. அங்கு தோ்தல் பிரிவு அலுவலா்களும் சுழற்சி முறையில் 24 மணி நேரம் தங்கியிருந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா் என மாநகராட்சி தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா்: திருவள்ளூா் ஆட்சியா்

சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

சீலிடப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


