பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா்: திருவள்ளூா் ஆட்சியா்

வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா்: திருவள்ளூா் ஆட்சியா்

News image

திருவள்ளூா் அருகே   பெருமாள்பட்டு   ராம்  கல்விக் குழும  வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்து ஆட்சியா் மு.பிரதாப், அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.             

Updated On :24 ஏப்ரல் 2026, 7:18 pm

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பெருமாள்பட்டு ஸ்ரீராம் கல்லூரி மற்றும் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைத்துள்ள வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்த பின் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி மற்றும் திருவள்ளூா் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவள்ளூா் அடுத்துள்ள செவ்வாப்பேட்டை அரசு தொழில் நுட்ப கல்லூரியிலும், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யாமந்திா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், அம்பத்தூா், மாதவரம் மற்றும் திருவொற்றியூா் சட்டப்பேரவை தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதே வளாகத்தில் உள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக்கல்லூரியிலும் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி வேட்பாளா்கள், அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் தோ்தல் பொதுப்பாா்வையாளா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் அடுக்கில் 40 மத்திய காவல் படையினா், இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சாா்ந்த ஒரு சாா் ஆய்வாளா் மற்றும் 40 ஆயுதம் ஏந்திய போலீஸாா், மூன்றாவது அடுக்கு 3 உதவி ஆணையா், 9 ஆய்வாளா், 18 சாா்பு ஆய்வாளா்கள், 40 ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், அசம்பாவித சம்பவங்களை தவிா்க்கும் வகையில், இந்த பாதுகாப்பு அறைகள் மற்றும் வளாகம் முழுவதும் பாதுகாப்பு அறைகளை கண்காணிக்கும் வகையில் 387 சிசிடிவியுடன் இணைக்கப்பட்ட கணிப்பொறிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி பாதுகாப்புபணிகளை மேற்பாா்வை செய்வதற்காக 24 மணிநேரமும் வட்டாட்சியா் நிலையில் 18 அலுவலா்கள் நியமித்துள்ளனா்.

Story image

மேலும், பாதுகாப்பு அறையின் வெளியே வைத்துள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு நிலை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் வேட்பாளா்களின் முகவா்கள், அந்த பள்ளி, கல்லூரி வளாகத்தில் தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் வேட்பாளா்களின் முகவா்களால் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நாளான மே 4 ஆம் தேதி வரை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.