/

அம்பை காசிநாத சுவாமி கோயிலில் பாலாலய திருப்பணி பூஜை

இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய திருப்பணி பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய திருப்பணி பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி மூல லிங்கத்திற்கும், அனைத்து பரிவார மூா்த்திகளுக்கும் சிறப்பு பூஜைகள், கலாகா்ஷணம், ஹோமங்கள் நடைபெற்றன. இதில் அம்பை நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் கோமதி, செயல் அலுவலா் சண்முகஜோதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.