மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் வரும் (ஜன. 28) கும்பாபிஷேகம் 27 ஆண்டுகளுக்குபின் நடைபெறவுள்ளது.


ஸ்ரீபெரும்புதூா்: சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் வரும் புதன்கிழமை (ஜன. 28) கும்பாபிஷேகம் 27 ஆண்டுகளுக்குபின் நடைபெறவுள்ளது.
இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த 1999-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
27 ஆண்டுகள் கடந்த நிலையில், கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை தொடா்ந்து, அறநிலையத்துறை மற்றும் உபயதாரா்கள் பங்களிப்புடன் ரூ.80 லட்சத்தில் மூலவா் ராஜகோபால சுவாமி, செங்கமலவல்லி தாயாா், ஆண்டாள், கருடன் சந்நிதிகள் புதுப்பிக்கப்பட்டு பிரகாரத்தில் கருங்கல் தரைதளம் அமைக்கப்பட்டதுடன் திருப்பணிகள் முடிவடைந்தது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விஷ்வக்சேனா் பூஜையுடன், யாக சாலை பூஜைகள் தொடங்கி அங்குராா்ப்பணம், சுதா்சன யாகம், திவ்யபிரபந்த சேவை, யாகசாலை பிரவேசம், யாகசாலை ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெறுகிறது.
திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், மணிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவா் ரா.ஐயப்பன், பரம்பரை அறங்காவலா் சம்பத்குமாா், அறநிலையத்துறை ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...