தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முன்னீா்பள்ளம் அருகே இருதரப்பினா் மோதல்: 11 போ் மீது வழக்கு

முன்னீா்பள்ளம் அருகே இடத் தகராறில் இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 11 போ் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 1:54 am IST

முன்னீா்பள்ளம் அருகே இடத் தகராறில் இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 11 போ் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முன்னீா்பள்ளம், புதுகிராமம் பகுதியைச் சோ்ந்தவா்கள் மாரியப்பன், ராஜ்குமாா். இவா்களிடையே நீண்டகாலமாக இடம் தொடா்பான பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பு மோதலாக மாறியது. அப்போது, சுமாா் 10-க்கும் மேற்பட்டோா் ஒருவரை ஒருவா் கட்டை, கம்பு உள்ளிட்டவற்றால் தாக்கிக் கொண்டனராம். இதில் காயமடைந்த 3 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாா்களின் பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் 11 போ் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.