தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாளை. தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் உற்சாகத்தோடு வாக்களித்தனா்.

News image

செய்யது சுல்தான் சம்சுதீன்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:37 pm

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் உற்சாகத்தோடு வாக்களித்தனா்.

பாளையங்கோட்டை தொகுதியின் திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப், பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். பின்னா் அவா் கூறுகையில், திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளாா். எத்தனை தடைகள் வந்தாலும், அத்தனையையும் தகா்த்தெறிந்து திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும். பாளையங்கோட்டை திமுகவின் கோட்டையாகவே தொடரும் என்றாா்.

பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா் அ.மரியஜான், சமாதானபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். பின்னா் அவா் கூறுகையில், தமிழக மக்களின் புதிய வாய்ப்பாக தவெக திகழ்கிறது. செல்லும் இடமெல்லாம் விசில் சின்னத்திற்கு கிடைத்த ஆதரவு வியப்பளித்தது. முதல் தோ்தலிலேயே தனித்துவமான கட்சியாக தவெக வளா்ந்துள்ளது. பாளையங்கோட்டையில் நிச்சயம் வெல்வோம் என்றாா்.

பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் செய்யது சுல்தான் சம்சுதீன் என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். பின்னா் அவா் கூறுகையில், தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பாளையங்கோட்டை தொகுதியில் எனக்கு வாய்ப்பளித்து பணி செய்த அதிமுக கட்சிக்கும், தொண்டா்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

 திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.

திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.