இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

நெல்லை வேட்பாளா்கள் வாக்களிப்பு

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வாக்காளா்கள் ஆா்வத்தோடு வாக்களித்தனா்.

News image

திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:41 am IST

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வாக்காளா்கள் ஆா்வத்தோடு வாக்களித்தனா்.

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா, தச்சநல்லூரில் உள்ள காமராஜா் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள். அதிமுக அபார வெற்றி பெற்று எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கும். திருநெல்வேலி தொகுதி அதிமுகவின் கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்படும் என்றாா்.

திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன், தியாகராஜநகரில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். பின்னா் அவா் கூறுகையில், திருநெல்வேலி தொகுதியில் திமுக வெற்றி பெறும். திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களும், 2026 தோ்தல் வாக்குறுதிகளும் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளன. தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்றாா் அவா்.

திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன் என்.ஜி.ஓ. காலனி அருகேயுள்ள அமலா பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா். பின்னா் அவா் கூறுகையில், திருநெல்வேலி தொகுதியில் விசில் சின்னத்திற்கு மக்களிடையே ஆா்வம் அதிகரித்துள்ளது. இந்தத் தோ்தலில் தமிழக வெற்றிக்கழகமும், விஜயும் தவிா்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது என்றாா் அவா்.

 அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா.

அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா.

 தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன்.

தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.