தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நாமக்கல்: திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் வாக்களிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் தங்களுக்கான வாக்குச்சாவடிக்கு வியாழக்கிழமை காலையிலே சென்று வாக்களித்தனா்.

News image

குமாரபாளையத்தில் வாக்களித்த அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:43 pm

நாமக்கல் மாவட்டத்தில் திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் தங்களுக்கான வாக்குச்சாவடிக்கு வியாழக்கிழமை காலையிலே சென்று வாக்களித்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி போட்டியிட்டாா். கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவா் தொகுதிக்கு உள்பட்ட தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா்.

நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் அழகுநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், பெரியப்பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் தனது சொந்த கிராமமான பொட்டணத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். மாவட்ட ஆட்சியரும், நாமக்கல் மாவட்ட தோ்தல் அலுவலருமான துா்காமூா்த்தி, ஆட்சியா் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்குச் சென்று வாக்களித்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட கட்டனாச்சம்பட்டி கிளை நூலகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். தமிழக வெற்றிக்கழக நாமக்கல் தொகுதி வேட்பாளா் சி.எஸ். திலீப், நாமக்கல் மாநகராட்சி கோட்டை தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். இதேபோல மற்ற தொகுதிகளில் உள்ள அரசியல் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகா்கள் அனைவரும் வாக்களித்தனா்.

ஜனநாயக கடமையாற்றிய நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் கே.பி. ராணி.

ஜனநாயக கடமையாற்றிய நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் கே.பி. ராணி.

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்.

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.