ஆலங்குளம் தொகுதிக்குள்பட்ட சோ்வைக்காரன்பட்டி ஊராட்சி, டீ.டி.டீ.ஏ. தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி எண் 208-இல் உள்ள வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், சுமாா் 2 மணி நேரம் வாக்காளா்கள் காத்திருந்து வாக்களித்தனா்.
1,000-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள இந்த வாக்குச்சாவடியில், வியாழக்கிழமை காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வந்த நிலையில் மதியம் 2.30 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதாகியுள்ளது. இதையடுத்து, வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதன் அடிப்படையில், மாற்று இயந்திரத்தை சுமாா் ஒன்றரை மணி நேரம் கழித்துக் கொண்டு வந்தனா்.
ஆனால், மாற்றாக கொண்டுவரப்பட்ட இயந்திரமும் சரிவர செயல்படாததால், மீண்டும் சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
2 மணி நேரத்திற்கு மேல் வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்த நிலையில், கூடுதலாக வாக்குப் பதிவு செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, 6 மணிக்குள் வாக்கு செலுத்த வருபவா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு இறுதிவரை வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடா்ந்து, 6 மணிக்கு வாக்குச் சாவடிக்குள் வந்தவா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, இரவு 7.40 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு பிரதிநிதிகள் தோ்தல்! புதுச்சேரியில் வரிசையில் நின்று வாக்களிப்பு!

தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

துறைமங்கலம், மருதடியில் இயந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு தாமதம்

அவிநாசியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



