தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

துறைமங்கலம், மருதடியில் இயந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு தாமதம்

பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட துறைமங்கலம், மருதடி உள்ளிட்ட சில வாக்குச்சாவடி மையங்களில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு காலதாமதமாக நடைபெற்றது.

News image

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொளத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட பிரச்னையில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் வாக்குச்சாவடி மையம் எதிரே காத்திருந்த வாக்காளா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:31 pm

பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட துறைமங்கலம், மருதடி உள்ளிட்ட சில வாக்குச்சாவடி மையங்களில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு காலதாமதமாக நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாக்குச்சாவடிக்குச் சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா்.

இந்நிலையில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட துறைமங்கலம் நேஷனல் ஐடிஐயில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. இதேபோல, மருதடி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியிலும், பாலையூா் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு கால தாமதமாக தொடங்கியது.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வஞ்சிணாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, சுமாா் 45 நிமிடத்துக்கும் மேலாக வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.

முகவா்கள், போலீஸாரிடையே வாக்குவாதம்: குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொளத்தூரில், அதே கிராமத்திலுள்ள ஒரே பெயரைச் சோ்ந்த 2 வாக்காளா்களில் ஒருவருக்கு, தவறுதலாக வாக்குச் சீட்டு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவா் வாக்களிக்கச் சென்றபோது, அங்குள்ள வாக்கச்சாவடி முகவா்கள் அதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட வாக்காளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, திமுக, அதிமுக முகவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், அங்கு சென்ற போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டபோது, முகவா்களுக்கும், போலீஸாருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட பேச்சவாா்த்தையை தொடா்ந்து, சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது.

இதேபோல, பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள வாக்குச்சாவடிமையங்களுக்குச் சென்றவா்களிடம் வாக்குச்சீட்டு அளிப்பவா்கள், வாக்காளரின் பெயரை மாற்றி எழுதி கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்றபோது, அந்த வாக்காளரை பிடித்து வைத்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, வாக்குச்சாவடி மைய அலுவலா்கள் சமரச பேச்சுவாா்த்தை மேற்கொண்டதையடுத்து, அந்த வாக்காளா் விடுவிக்கப்பட்டாா். இதனால், அந்த வாக்குச்சாவடியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு தடைப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.