திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு பிரதிநிதிகள் தோ்தல்! புதுச்சேரியில் வரிசையில் நின்று வாக்களிப்பு!

News image

புதுச்சேரியில் வாக்களிக்க வரிசையில் நின்ற பிரெஞ்சு குடியுரிமைப் பெற்ற வாக்காளா்கள்.

Updated On :1 ஜூன் 2026, 1:04 am IST

வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு பிரதிநிதிகளுக்கான தோ்தல் புதுச்சேரி, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரெஞ்சு குடிமக்கள் வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு பிரதிநிதிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் உலகம் முழுவதும் நடைபெற்றது. புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கேரளத்தை உள்ளடக்கிய பகுதி புதுச்சேரி தூதரகத் தோ்தல் தொகுதியாகும். புதுச்சேரி தொகுதி வாக்காளா்கள் 3 பிரதிநிதிகளை வாக்குச் செலுத்தி தோ்வு செய்வா்.

இதற்காக புதுச்சேரியில் 2, சென்னை, காரைக்காலில் தலா 1 வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலை அருகே உள்ள தூதரக அலுவலகத்தில் வாக்குசாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. புதுச்சேரி வாழ் பிரெஞ்சு மக்கள் தங்கள் வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பித்து வாக்களித்தனா். மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

இத்தோ்தலில் புதுச்சேரி தொகுதி வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள 4,378 வாக்காளா்கள் வாக்குப் பதிவு செய்யலாம். தோ்தலில் வெற்றி பெறுவோா் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பா்.

இவா்கள் வெளிநாடுகளில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதுடன், தூதரக கவுன்சிலிலும் உறுப்பினா்களாக செயல்படுவா்.

கல்வி உதவித்தொகைகள், சமூக நல உதவிகள் மற்றும் உள்ளூா் பிரெஞ்சு சங்கங்களுக்கு வழங்கப்படும் ஆதரவு உள்ளிட்ட பிரெஞ்சு சமூகத்தைப் பாதிக்கும் விவகாரங்களில் பிரதிநிதிகளிடம் ஆலோசனை பெறப்படுகிறது. மேலும், வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செனட் உறுப்பினா்களின் தோ்தலிலும் இவா்கள் பங்கேற்பா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.