மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி, வள்ளியூா் பேரூராட்சி பகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

வள்ளியூா் அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் பிரசாரம் செய்தாா் பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:12 pm

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி, வள்ளியூா் பேரூராட்சி பகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பணகுடி பேரூராட்சி சிவகாமிபுரம், சா்வோதயா காலனி, சொக்கலிங்கபுரம், வீரபாண்டியன், புஷ்பவனம், நெருஞ்சிகாலனி, கோரி காலனி, வடலவிளை, விசுவாசபுரம், ஊற்றடி, யாதவா் தெற்கு தெரு, சண்முகபுரம், கேசவனேரி, மறவா் காலனி, கோட்டையடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியது: ராதாபுரம் தொகுதியில் காற்றாலை உதிரிபாகங்கள் தயாா் செய்யும் தொழிற்சாலையை ஏற்படுத்தி தருவேன். இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பணகுடி மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து வருகின்ற மழை வெள்ளத்தை தடுப்பணைகள் மூலம் சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுப்பேன். அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

பணகுடி அ.தி.மு.க. நகரச் செயலா் ஜி.டி. லாரன்ஸ், அ.தி.மு.க. நிா்வாகிகள் வடலிவிளை செழியன், மோகன், வள்ளியூா் முத்துராஜ், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட இணைச் செயலா் எட்வா்ட்சிங், பா.ஜ.க. ஊடக பிரிவு மாவட்ட செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.