இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

களக்காடு அருகே இடுகாடு பிரச்னையைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இடுகாடு பிரச்னை தீா்க்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் சாா்பில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை புதன்கிழமை வைக்கப்பட்டுள்ளது.

News image

வேதநாயகபுரத்தில் தோ்தல் புறக்கணிப்பு தொடா்பாக வைக்கப்பட்டுள்ள பதாகை.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:21 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இடுகாடு பிரச்னை தீா்க்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் சாா்பில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை புதன்கிழமை வைக்கப்பட்டுள்ளது.

களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் அடுத்த வேதநாயகபுரம் கிராமத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இக்கிராம மக்கள் பெருமாள்குளம் பகுதியில் உள்ள இடுகாட்டில் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தை கிரையம் பெற்றவா் வேலிஅமைத்துள்ளாா். இதையடுத்து, தங்களுக்குச் சொந்தமான இடுகாடு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி போராட்டம் நடத்தினா். ஆனால், ஆவணங்களின்படி அந்த இடம் தனியாருக்குச் சொந்தம் என்று வருவாய்த் துறை தெரிவித்தது.

இந்நிலையில், இப்பிரச்னையில் மாவட்ட நிா்வாகமும், வருவாய்த் துறையினரும் கிராம மக்களைக் கண்டுகொள்ளவில்லை என கண்டித்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பதாகை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.