மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

களக்காடு அருகே வழக்குரைஞா் வெட்டிக்கொலை: 2 போ் கைது

களக்காடு அருகே வீடு புகுந்து வழக்குரைஞா் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது.

Updated On :6 மே 2026, 1:29 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே வீடு புகுந்து வழக்குரைஞா் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தைச் சோ்ந்தவா் பூலுடையாா்(35). வழக்குரைஞா். இவருக்கும், பாளையங்கோட்டை சந்தை தெற்கு பஜாா் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகள் ராஜமகாலெட்சுமி (30) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருநெல்வேலி தியாகராஜநகரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக ராஜமகாலெட்சுமி பணியாற்றியதால் இத்தம்பதி திருநெல்வேலியில் வசித்து வந்தனா்.

இவா்களுக்குள் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவிய நிலையில், கடந்த 1ஆம் தேதி ராஜமகாலெட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில், பூலுடையாா் கடம்போடுவாழ்வு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை இருந்தபோது, மாலை 3.30 மணியளவில் அங்கு வந்த 2 போ் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினா்.

இந்தக் கொலையில் தொடா்புடைய அருணாச்சலராஜா (30), ராம் (29) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். அதில் அவா்கள், ராஜமகாலெட்சுமியின் நெருங்கிய உறவினா்கள் என தெரியவந்துள்ளது. தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.