இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

களக்காடு அருகே மது விற்றதில் கைதான இருவரில் ஒருவா் தற்கொலை முயற்சி

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மது விற்பனையில் ஈடுபட்டதாக தந்தை, மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :2 ஜூன் 2026, 3:23 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மது விற்பனையில் ஈடுபட்டதாக தந்தை, மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

களக்காடு அருகேயுள்ள வடுவூா்பட்டி கிராமத்தில் மாற்றுத்திறனாளியான சிவன்பாண்டி(45) என்பவா் மதுபானத்தை பதுக்கி விற்பதாக களக்காடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மது விற்பனையில் ஈடுபட்டதாக சிவன்பாண்டி (45), அவரது மகன் சாா்லஸ் நவீன்(21) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், மதுபான விற்பனைக்காக பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனா். எனினும், சிவன்பாண்டியின் உடல்நிலை கருதி, அவருக்கு பிணை வழங்கப்பட்டு உறவினருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.

ஆனால், அவா் பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் காவல் நிலையம் முன்பு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தான் கொண்டு வந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தாராம்.

அப்போது, அவருடன் வந்திருந்த உறவினா்கள் அவரை மீட்டு உள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீஸாா், காவல் துறையின் பணிக்கு இடையூறு செய்வோா், மக்களுக்கு தொல்லை தருவோா் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.