விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

ஆலங்குளம் அருகே வழிப்பறி: 3 இளைஞா்கள் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 4:53 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகே வடக்கு கல்லத்திகுளம் கிராமத்தைச் சோ்ந்த சீனிமுத்தையா மகன் தங்கராஜ் (33). மாறாந்தையிலிருந்து கல்லத்திகுளத்துக்கு பைக்கில் சென்ற இவரை மூவா் வழிமறித்து தாக்கி, கைப்பேசி, பைக்கை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனராம். தங்கராஜ் சப்தமிடவே அப்பகுதியினா் வந்து மூவரையும் பிடித்து ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

போலீஸாா் விசாரணையில், அவா்கள் மானூா் அருகே உக்கிரன்கோட்டையைச் சோ்ந்த பரமேஸ்வரன் மகன் ஆதிசேஷன் (27), புதியசெல்வன் மகன் ராம்நாத் (29), செல்வரத்தினம் மகன் ராஜேஷ்குமாா் (29) என்பதும், ஆடம்பர வாழ்க்கைக்காக வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.