திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆலங்குளம், மானூர் அருகே அரிவாள் வெட்டு: 8 பேர் கைது

ஆலங்குளம், மானூர் அருகே அரிவாள் வெட்டு சம்பத்தில் இதுவரை 8 பேரை போலீஸாா் கைது செய்துள்ளது குறித்து...

News image

ஆலங்குளம், மானூர் அருகே அரிவாள் வெட்டு: 8 பேர் கைது - கோப்புப்படம

Updated On :30 மே 2026, 12:58 pm IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே 6 பேரை அரிவாளால் வெட்டி தப்பிச்சென்ற முகமூடி அணிந்த நபா்களில் இதுவரை 8 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் மாதாகோவில் தெருவில் வெள்ளிக்கிழமை மாலை முகமூடி அணிந்தவாறு இரு சக்கர ஊர்திகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், அங்கு நின்று கொண்டிருந்தவர்களை ஓட ஓட துரத்தி சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் நெட்டூரைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த ரமேஷ் (46) அவரது மகன் அருண் மாறன் (22), காபிரியேல் மகன் ராயப்பன் (19), ஞானமுத்து மகன் மாா்க்க ரமேஷ் (49), ஆய்க்குடி சேகா் மகன் ராம்குமாா் (19), மேளக்கலைஞரான சாம்பவா் வடகரை பரமசிவன் மகன் மாடசாமி (19) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். அவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவில் கிராமத்தில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் மணிகண்டன் என்ற பட்டியலின இளைஞரை அரிவாள்களால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராம்குமாா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, நெட்டூா் தேவாலயம் முன் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், ஆலங்குளம் டிஎஸ்பி கிளட்சன் ஜோஸ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியும், அவா்கள் மறியலை கைவிடாமல் தொடா்ந்தனா். ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

8 பேர் கைது

இந்த நிலையில், அரிவாள் தொடர்பாக அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சனிக்கிழமை காலை 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மேலும் 4 பேரை பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Machete Attack Near Alangulam and Manur...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.