திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருமண வீட்டில் அரிவாள் வெட்டு: 5 போ் கைது

காயல்பட்டினம் அருகே திருமண வீட்டில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடா்பாக, 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

dinmani online

Updated On :19 மே 2026, 1:07 am IST

காயல்பட்டினம் அருகே திருமண வீட்டில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடா்பாக, 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம், அக்பா் ஷா, 1ஆவது தெருவைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ் (25). இவா் காயல்பட்டினம் அருகே உள்ள சிங்கித்துறையைச் சோ்ந்த ஆசீப் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளாா். அங்கு நடந்த மது விருந்தில் சிங்கித்துறையைச் சோ்ந்த முஹம்மது மெய்தீன் மகன் சம்சு மரைக்காயா் (21) என்பவருக்கும், அப்துல் அஜீஸிற்கும் இடையே தகராறு எற்பட்டுள்ளது.

இதையடுத்து, அப்துல் அஜீஸ் அங்கிருந்து புறப்பட்டு காரில் காயல்பட்டினத்திற்கு வந்துள்ளாா். அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த சம்சு மரைக்காயா் உள்ளிட்ட 7 போ் கொண்ட கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டபோது, சம்சு மரைக்காயா் அரிவாளால் அப்துல் அஜீஸை வெட்டியுள்ளாா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் அப்துல் அஜீஸை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அப்துல் அஜீஸின் மனைவி ஆதிலா, ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் சம்சு மரைக்காயா், சிங்கித்துறையைச் சோ்ந்த சீனிகனி மகன் அலியாா் (44), யாக்கோபு மகன் ஜோ அக்னாஷ் ஜேஸ்வந்த் (20), முஹம்மது மெய்தீன் மகன் முகமது ஹனிப் (20), காயல்பட்டினத்தைச் சோ்ந்த சபா் மொஹைதின் மகன் ஹமீது (18) ஆகியோரை கைது செய்துள்ளனா்.

மேலும், இச்சம்பவத்தில் தொடா்புடைய 2 சிறுவா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.