எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்

திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தவெக ஆட்சி நடைபெற்று வருவதால், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என மு.க. ஸ்டாலின் பேசியது குறித்து...

News image

மு.க. ஸ்டாலின் - எக்ஸ்

Updated On :28 ஜூன் 2026, 7:09 pm IST

திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தவெக ஆட்சி நடைபெற்று வருவதால், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 28) தெரிவித்தார்.

மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை வானகரத்தில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

''பார்த்து பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை சீரழிய விடமாட்டோம். தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு, மின்வெட்டு என பலவற்றிலும் நிலைமை மோசமடைந்துள்ளது.

தமிழ்நாடு பாதாளத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு துணையாக நாம் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை சீரழிய விடாமல் திமுக தடுக்கும் பொறுப்பும் கடமையும் திமுகவுக்கு உண்டு. தமிழன் நிலத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பது திமுக.

திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால், தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். 6 மாதங்களில் கூட வரலாம்.

தமுக ஆட்சியில் தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் வளர்ச்சி அடைந்தது. நாட்டிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி கண்ட மாநிலங்களின் பட்டியலில் 2 ஆம் இடத்துக்கு தமிழ்நாடு முன்னேறியது. தற்போது சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டால் தொழில்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றன'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Elections could be held at any time: DMK leader M.K. Stalin Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.