ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழகத்தின் மனசாட்சியாக செயல்படுங்கள்: திமுக எம்.பி.களுக்கு ஸ்டாலின் அறிவுரை

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பதிவு குறித்து...

mk stalin

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - படம்: எக்ஸ்

Published On :17 ஜூலை 2026, 4:40 am IST

மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.

மத்திய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு திமுக எம்பி-யும் செயல்படுவார்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் இருந்தபடி, காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Summary

El líder del DMK, M.K. Stalin, ha declarado que los miembros del parlamento del DMK alzarán la voz contra los intentos de construir la presa de Mekedadu y para defender los derechos legítimos de Tamil Nadu sobre el río Cauvery.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.