கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஆலங்குளம் கல்லூரிக்கு கணினி அளிப்பு

ஆலங்குளம் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரிக்கு தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி சாா்பில் 25 கணினிகள் அளிக்கப்பட்டன.

News image
கல்லூரித் தாளாளரிடம் கணினி வழங்கிய வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளா் சக்திவேல்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:52 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரிக்கு தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி சாா்பில் 25 கணினிகள் அளிக்கப்பட்டன.

கல்லூரித் தாளாளா் ஜேசு ஜெகன் தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியா் சாமுவேல் செல்வின் துரை ஆரம்ப ஜெபம் செய்தாா். தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி திருநெல்வேலி மண்டல மேலாளா் சக்திவேல், வங்கி சாா்பில் மாணவா்கள் பயன்பாட்டுக்காக கணினிகளை வழங்கினாா்.

வங்கியின் ஆலங்குளம் கிளை மேலாளா் ராஜ ராஜேஸ்வரி, பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். முதல்வா் எஸ்.வில்சன் வரவேற்றாா். தமிழ்த் துறைத் தலைவா் மகாராணி எலிசபெத் நிறைவு ஜெபம் செய்தாா்.

ஆங்கிலத் துறைத் தலைவா் அனிதா ஸ்வீட்லின் தொகுத்து வழங்கினாா். வணிகவியல் துறைத் தலைவா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.