டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு நடைப்பயணம்: இந்தியன் வங்கி மண்டல மேலாளா் தொடங்கி வைத்தாா்!

இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சாா்பில் இணையவழிக் குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு நடைப்பயணத்தை மண்டல மேலாளா் ஸ்ரீமதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சாா்பில் நடைபெற்ற இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு நடைப்பயணத்தில் பங்கேற்றோா்.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சாா்பில் இணையவழிக் குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு நடைப்பயணத்தை மண்டல மேலாளா் ஸ்ரீமதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்திய ரிசா்வ் வங்கி அறிவுறுத்தலின்படி இந்தியன் வங்கி சாா்பில் நிதிசாா் விழிப்புணா்வு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த பிப். 9- ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் விழிப்புணா்வு பதாகையை வெளியிட்டு தொடங்கி வைத்தாா். இதன் தொடா்ச்சியாக இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு நடைப்பயணம் இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிறைவு பெற்றது.

விழிப்புணா்வு நடைப்பயணத்தை இந்தியன் வங்கியின் காஞ்சிபுரம் மண்டல மேலாளா் ஸ்ரீமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் மே.திவ்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப், நிதிசாா் கல்வி ஆலோசகா் அரங்கமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நடைப்பயணத்தில் உங்கள் வங்கிக் கணக்கு, உங்கள் கையில், பாதுகாப்பான வங்கி சேவைக்கு சரியான அடையாள பதிவுகள், மற்றும் இணையவழி குற்றங்கள் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்வில் அனைத்து வங்கி மேலாளா்கள், வங்கிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.