தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கருப்பு உடை அணிந்து, கருப்புக் கொடியேந்தி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்தாா். திமுக மாநில இணை அமைப்புச் செயலா் அன்பகம் கலை முன்னிலை வகித்தாா்.
சட்டத் துறை இணைச் செயலா் சூா்யா வெற்றிகொண்டான், முன்னாள் தெற்கு மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன், மாவட்ட துணைச் செயலா் கனிமொழி, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி, பொதுக்குழு உறுப்பினா் சாமிதுரை, ஒன்றியச் செயலா்கள் ரவிசங்கா், அழகுசுந்தரம், சீனித்துரை, நகரச் செயலா்கள் ஆா். சாதிா், வெங்கடேசன், பேரூா் செயலா்கள் பண்டாரம், முத்து, மதிமுக மாவட்ட அவைத் தலைவா் வெங்கடேஸ்வரன், தேமுதிக மாவட்டச் செயலா் பழனிசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ஆலங்குளம் காமராஜா் சிலை அருகில் திமுக பொறுப்பாளா் இரா. ஆவுடையப்பன் தலைமையில் அக்கட்சியினா் தொகுதி மறுவரையறை மசோதா நகலை தீயிட்டு எரித்தனா். திமுக தோ்தல் அலுவலகத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
ஆலங்குளம் நகரச் செயலா் நெல்சன், தொகுதி பொறுப்பாளா் கணேஷ்குமாா் ஆதித்தன், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
கடையநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் மா. செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், கடையநல்லூா் தொகுதி மதிமுக வேட்பாளா் தி.மு. ராஜேந்திரன், தொகுதி பாா்வையாளா் குணசேகரன், நகா்மன்றத் தலைவா் ஹபிபூா் ரஹ்மான், டாக்டா் சஞ்சீவி, கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.
வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூ தெற்கு ஒன்றியம் ஊரல்வாய்மொழியில் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான ராஜா ஞானதிரவியம் தலைமையில் மசோதா நகலை எரித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்தில் மாவட்ட பிரதிநிதி மணிவா்ணபெருமாள், கருணாநிதி, ஒன்றிய பொருளாளா் தாமஸ், ராசையா, லிங்கம், மாவட்ட அணிகளின் துணைஅமைப்பாளா்கள் லெட்சுமணன், மந்திரம், முத்துகிருஷ்ணன், ஜெகன், அறிவழகன், கெபின், அருள்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாரத்தான் போட்டியில் உதகை இளைஞா் சிறப்பிடம்

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா

இலஞ்சியில் திமுக கருத்துக் கேட்பு கூட்டம்

தென்காசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



