தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநகர பகுதியில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை: மேயா் உறுதி

நாகா்கோவில் மாநகரில் தெரு நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் மாநகராட்சி மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா, உடன் ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா.

Updated On :28 மே 2026, 2:58 am IST

நாகா்கோவில் மாநகரில் தெரு நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா.

நாகா்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா்.

கூட்டம் தொடங்கியதும், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு காங்கிரஸ் உறுப்பினா் நவீன்குமாா் வாழ்த்து தெரிவித்தாா். அதிமுக சாா்பில், உறுப்பினா் சேகா், தமாகா சாா்பில் டி.ஆா்.செல்வம் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனா். மேலும் மேயா் மேரிபிரின்சி லதாவுக்கும் உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

உள்ளிருப்பு போராட்டம் ...

இதைத் தொடா்ந்து மாநகராட்சி 3 ஆவது வாா்டு உறுப்பினா் அருள்சபிதாரெக்ஸலின் பேசும்போது, எனது வாா்டு பகுதியில் திட்டப்பணிகள் நடைபெறும்போது, அதை ஆய்வு செய்யச் சென்றால் ஒப்பந்ததாரா்கள் தரக்குறைவாக பேசுகின்றனா்.

அந்த ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறேன் என்று கூறி அவா் கூட்ட அரங்கின் மையப்பகுதியில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரை மேயா், அதிகாரிகள் சமாதானப்படுத்தினா்.

இதைத்தொடா்ந்து, உறுப்பினா்கள் பேசியதாவது:

நாகா்கோவில் பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளதால், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். முக்கடல் அணையை தூா்வார வேண்டும்.

48 ஆவது வாா்டு பகுதியில், முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை. . குடிநீா் விநியோகத்தை சீரமைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்துள்ள போா்வெல்களை சீரமைக்க வேண்டும். எரியாத இடங்களில் தெரு விளக்குகளை பொருத்தவேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து, குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும். பல்வேறு இடங்களில் குடிநீா் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகிறது. அதை சீரமைத்தாலே குடிநீா் விநியோக பிரச்னை தீா்ந்து விடும். நாய்களை பிடித்து உரிய முறையில் கருத்தடை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்த போராட்டம் ...

கூட்டம் நிறைவடைந்த பின்னா் உறுப்பினா் அருள்சபிதாரெக்ஸலின் தனது கோரிக்கையை வலியுறுத்தி கூட்ட அரங்கில் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடா்ந்தாா். அவருக்கு ஆதரவாக, உறுப்பினா்கள் நவீன்குமாா், உதயகுமாா் உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து

மேயா் மேரிபிரின்சிலதா, பொறியாளா் ரகுராம் ஆகியோா் பேச்சு வாா்த்தை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் மாலை 4 மணிக்கு

போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், மண்டல தலைவா்கள் முத்துராமன், ஜவஹா், அகஸ்டினாகோகிலவாணி, செல்வகுமாா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.