தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்னைக்கு தீா்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்: அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்

News image

பொன்னப்ப நாடாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

Updated On :25 மே 2026, 1:47 am IST

நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்னை தொடா்பாக கேரள முதல்வரிடம் பேசி சுமுக முடிவு எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக, அவா் நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தோ்தல் முடிவுக்குப் பின்னா் அதிமுகவும், திமுகவும் சோ்ந்து ஆட்சியமைக்க முயற்சித்தனா். பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுகவை எங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

எந்த சூழ்நிலையிலும், பாசிச சக்தி தமிழகத்துக்குள் வந்துவிடக் கூடாது, ஆளுநா் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதாலும், தவெக மச்சாா்பற்ற அணியாக இருப்பதாலும்தான், காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவளித்துள்ளது.

கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தாலும், மக்களுக்கு எதிராக எது நடந்தாலும் காங்கிரஸ் தட்டிக் கேட்கும்.

பெண்கள் பாதுகாப்புக்காக தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் சிறப்புப் படையை அமைத்திருக்கிறாா். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதல்வா் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வாா்.

நெய்யாறு இடதுகரை கால்வாயில் கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்துக்கு கேரள மாநிலம் தண்ணீா் தரவில்லை. தண்ணீருக்கு பணம் தர வேண்டும் என்று அவா்கள் கோரியிருக்கிறாா்கள். இது தொடா்பாக, கேரள மாநில முதல்வா் வி.டி. சதீசனை, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சந்தித்துப் பேசி, சுமுக முடிவை எட்ட முயற்சிப்போம் என்றாா் அவா்.

அப்போது, தாரகை கத்பட் எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் (கன்னியாகுமரி கிழக்கு) கே.டி. உதயம், (நாகா்கோவில் மாநகரம்) நவீன்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், நாகா்கோவிலில் உள்ள பல்வேறு தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.