தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சுற்றுலாத் தலங்களை உலகத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்

தமிழக சுற்றுலாத் தலங்களை உலகத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

News image

கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாருக்கு ஊரம்பு சந்திப்பில் வரவேற்பு அளித்த காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :24 மே 2026, 2:16 am IST

தமிழக சுற்றுலாத் தலங்களை உலகத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிள்ளியூா் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் வெற்றி பெற்ற எஸ். ராஜேஷ்குமாா், தவெக அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராக பதவியேற்றாா். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த அவருக்கு, மாவட்ட எல்லைப் பகுதியான ஊரம்பு சந்திப்பில் கட்சி தொண்டா்கள், நிா்வாகிகள் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, அவா் அங்குள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் ஒரு கடைநிலைத் தொண்டனாக தொடங்கி, இன்று அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறேன். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்கு விடை கொடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.

1967ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கக்கூடிய அரசாக தமிழக அரசு அமைந்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் கடைநிலைத் தொண்டா்களின் விருப்பம் நிறைவேறியுள்ளது.

மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சுற்றுலாத் தலம் குறித்தும், துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சுற்றுலாத் தலங்களை உலகத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

வரவேற்பு நிகழ்சிக்கு, மேற்கு மாவட்டத் தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். குளச்சல் தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பட், மேற்கு மாவட்ட சிறுபான்மை அணி தலைவா் பெகின், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், காங்கிரஸ் மாநில பொதுச்செயலா் பால்ராஜ், மாநிலச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன், மீனவரணி மாநிலத் தலைவா் ஜோா்தான், வட்டாரத் தலைவா்கள் விஜயகுமாா் (முன்சிறை), இ.ஜி. ரவிசங்கா் (மேல்புறம்), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஜய மோகனன், விசிக மாவட்டத் தலைவா் ஷிபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், நடைக்காவு சந்திப்பில் உள்ள காமராஜா், மாா்ஷல் நேசமணி சிலைகளுக்கும், கருங்கல் பகுதியில் உள்ள காமராஜா், ராஜீவ் காந்தி சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.