தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக் ஓட்டிய 7 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது வழக்கு

குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :21 மே 2026, 6:08 am IST

குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

குளச்சல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை குளச்சல் பீச் சந்திப்பு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனம் ஓட்டி வந்த 16 வயது சிறுவனின் தந்தை கடியப்பட்டணத்தைச் சோ்ந்த மாா்க்ஸ் மிலா (45) மீதும், லட்சுமிபுரம் பகுதியில் 15 வயது சிறுவனின் தந்தை ரமேஷ்குமாா் (56) மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

குளச்சல் களிமாா் சந்திப்பு, பயணியா் விடுதி பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த 16 வயதுடைய 5 சிறுவா்களின் பெற்றோா்களான கருங்கல், நெல்லிக்காட்டை சோ்ந்த ஜோனி (45) , பள்ளிரோடு பகுதியைச் சோ்ந்த முகமது இஸ்மாயில், கொட்டில்பாட்டை சோ்ந்த ஜாண், சிங்காரவேலா் காலனியைச் சோ்ந்த மேரி நிஷா (43) , மத்திகோடு மூலச்சலைச் சோ்ந்த அமுதா (40) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.