முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

News image

கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 1:02 am IST

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வைகுண்டதாஸ் தலைமையிலான போலீஸாா் வெட்டுவெந்நி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா்.

அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் மாா்த்தாண்டம் அருகே விரிகோடு, காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த சசி மகன் சஜூ (24) என்பதும், 50 கிராம் கஞ்சாவைப் பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.