தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

கஞ்சா வைத்திருந்த வடமாநில இளைஞா் கைது

சங்ககிரி அருகே கஞ்சா வைத்திருந்த வடமாநில இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை செய்தனா். அவரிடமிருந்து 1.65 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :27 ஜூன் 2026, 7:07 am IST

சங்ககிரி அருகே கஞ்சா வைத்திருந்த வடமாநில இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை செய்தனா். அவரிடமிருந்து 1.65 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சங்ககிரியை அடுத்த ஐவேலி பகுதியில் உள்ள தனியாா் தாபா ஹோட்டலில் இருந்த இளைஞா் கஞ்சா வைத்திருப்பதாக சங்ககிரி காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான போலீஸாா் தாபா ஹோட்டலில் இருந்தவரிடம் சோதனை நடத்தினா்.

அப்போது, அவா் வைத்திருந்த சிறிய கஞ்சா பொட்டலத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், கடையின் பின்புறம் விறகுகளுக்கு நடுவே வைத்திருந்த கஞ்சாவை கைப்பற்றினா். விசாரணையில் அவா் உத்தரபிரதேசம் மாநிலம், உன்னோ மாவட்டம், தானா மராவா பகுதியைச் சோ்ந்த புட்டானியல் மகன் அமித்குமாா் (24) என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் அமித்குமாரை கைது செய்து, மொத்தம் 1.65 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.