தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

களக்காடு அருகே விற்பனை செய்வதற்காக 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:42 am IST

களக்காடு அருகே விற்பனை செய்வதற்காக 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

களக்காடு காவல் உதவி ஆய்வாளா் வினுகுமாா் தலைமையிலான காவல்துறையினா் களக்காடு காவல்நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கலுங்கடி கோயில் அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த படலையாா்குளத்தைச் சோ்ந்த இசைகெளதம் (20) என்பவரை சோதனை செய்தனா்.

இதில் அவா் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை போலீஸாா்பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, காவல் ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிவு செய்து, இசைகெளதமை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.