டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அழகப்பபுரத்தில் குழந்தைகள் பூங்காவை இடிக்க பொதுமக்கள் எதிா்ப்பு

அழகப்பபுரத்தில் குழந்தைகள் பூங்காவை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றனா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:02 pm

Syndication

அழகப்பபுரத்தில் குழந்தைகள் பூங்காவை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்த முயன்றனா்.

அழகப்பபுரம் பேரூராட்சி, செங்குளத்தின் எதிரில் நேரு குழந்தைகள் பூங்கா கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த நபா் பூங்காவினுள் தனக்கு பாதை இருப்பதால், பூங்காவை இடித்து பாதை ஏற்படுத்தித் தருமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பூங்காவில் வழிப்பாதையை ஏற்படுத்திக் கொடுக்க பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை பொதுப்பணித் துறை அதிகாரிகள் பூங்காவை இடிக்க பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனா்.

இந்நிலையில், பூங்காவை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா். தகவலறிந்த அஞ்சுகிராமம் காவல் ஆய்வாளா் பொன்ராஜ், உதவி ஆய்வாளா் ராஜ்குமாா், அழகப்பபுரம் பேரூராட்சி தலைவா் அனிட்டா ஆன்ட்ரூஸ், துணைத் தலைவா் ஆன்ட்ரூஸ் மணி, வாா்டு உறுப்பினா்கள், செயல் அலுவலா் பூதப்பாண்டி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் பிரேமலதா ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேச்சுவாா்த்தையில், அதிகாரிகள் 15 நாள்கள் கால அவகாசம் கேட்டதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.