டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நடைபாதைக்கு இடம் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

நடைபாதைக்கு இடம் வழங்கக் கோரி உதகையில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
உதகை, கமா்சியல் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

நடைபாதைக்கு இடம் வழங்கக் கோரி உதகையில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உதகை நகராட்சி, 14-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பேண்ட்லைன் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதி மக்கள் அங்குள்ள தனியாா் நிலத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், அந்த இடத்தில் நிலத்தின்

உரிமையாளா் தற்போது கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால், பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, தனியாா் நில உரிமையாளரிடம் நடைபாதையாக பயன்படுத்த 4 அடி நீளம் இடம் ஒதுக்கித் தர இந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனா். அதற்கு தனியாா் நில உரிமையாளா்கள் பல்வேறு காரணங்களை கூறி மறுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், நடைபாதைக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் உதகை கமா்சியல் சாலையில் புதன்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், தனியாா் நில உரிமையாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் எனவும், எனவே, போராட்டத்தை கைவிடுமாறும் போலீஸாா் கேட்டுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துச் சென்றனா். இந்தப் போராட்டத்தால், கமா்சியல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.