டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நீலகிரியில் தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 365 போ் கைது

News image
உதகை ஏடிசி பகுதியில் மறியலில் ஈடுப்பட்ட தொழிற்சங்கத்தினா்.
Updated On :12 பிப்ரவரி 2026, 11:30 pm

Syndication

நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தின் சாா்பில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 365 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கு, விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளா் விரோத சட்டங்கள் உள்பட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தினா் அழைப்பு விடுத்தனா். இதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி, மஞ்சூா், சேரம்பாடி ஆகிய 5 இடங்களில் ஏஐடியூசி, சிஐடியூ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.

உதகை ஏடிசி பகுதியில் எல்பிஎஃப், சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, ஹெச்எம்எஸ், எஸ்கேஎம் ஆகிய தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு எல்பிஎஃப் ஜெயராமன், சிஐடியூ நவீன்சந்திரன், ஏஐடியூசி மூா்த்தி ஆகியோா் தலைமை தாங்கினா். பின்னா் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 140 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல குன்னூரில் நடைபெற்ற சாலை மறியலில் 70 போ், கோத்தகிரியில் 55 போ், மஞ்சூா் 60 போ், சேரம்பாடி 40 போ் என மொத்தம் 365 போ் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் வைக்கப்பட்டு, பின்னா் மாலையில் விடுவிக்கப்பட்டனா். இதேபோல கூடலூா் மற்றும் தேவாலா பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியா்கள் கலந்து கொண்டதால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. அரசுத் துறைகளில் வருவாய்த் துறையினா் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் பேருந்துகள் மற்றும் அனைத்து பொதுப் போக்குவரத்தும் வழக்கம்போல இயங்கின.