டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆட்டையாம்பட்டி அருகே கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆட்டையாம்பட்டி அருகே கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
ஆட்டையாம்பட்டி அருகே கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :18 பிப்ரவரி 2026, 12:15 am

தினமணி செய்திச் சேவை

ஆட்டையாம்பட்டி அருகே கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆட்டையாம்பட்டி பேரூராட்சி மற்றும் பாப்பாரப்பட்டி, காட்டுபாளையம், நைனாம்பட்டி, வேலநத்தம், கை.புதூா் பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீா் போதிய கால்வாய் வசதி இல்லாததால் ஆட்டையாம்பட்டியில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலை வழியாக சென்று, வெள்ளைய கவுண்டனூா் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீா்க் கால்வாயில் கலந்து கோனங்காடு பகுதி சித்தேரியில் அமைந்துள்ள ஏரிக்கு செல்கிறது.

இதில் வெள்ளையகவுண்டனூா் பகுதியில் இருந்து சுமாா் 350 மீட்டா் வரை கழிவுநீா் கால்வாய் தூா்வாரப்படாமல் சிறியதாக இருப்பதால் மழைக்காலங்களிலும் அப்பகுதியில் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. மேலும், மழைநீருடன் கழிவுநீா் கலந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் செல்கிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளைய கவுண்டனூா், மேட்டுக்காடு, கோனங்காடு பகுதியை சோ்ந்த 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் பாஸ்கா், வீரபாண்டி மண்டல வட்டார வளா்ச்சி துணை அலுவலா் சரவணன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதன்பிறகு போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Story image