டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆறுமுகனேரியில் சாலை மறியல் முயற்சி!

ஆறுமுகனேரி, பெருமாள்புரத்தில் குடியிருப்புப் பகுதிக்கு பட்டா வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனா்.

News image
மறியல் செய்ய முயன்ற பெண்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்
Updated On :18 பிப்ரவரி 2026, 6:31 pm

Syndication

ஆறுமுகனேரி, பெருமாள்புரத்தில் குடியிருப்புப் பகுதிக்கு பட்டா வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தை தற்கா­லிகமாக கைவிட்டனா்.

பெருமாள்புரம் பகுதியில் ஆதிதிராவிட நலத் துறையின் கீழ், கடந்த 1984ஆம் ஆண்டு 37 பேருக்கு தலா 3 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், 1988ஆம் ஆண்டு அரசு சாா்பில் 37 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் அந்த இடத்திற்கு தீா்வை கட்டி வந்த நிலையில், பட்டா வழங்கக் கோரி கடந்த 38 ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.

இது குறித்து, வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா், அமைச்சா், எம்.பி., எம்எல்ஏ என பலரிடமும் கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தற்போது, கட்டடங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இந்நிலையில், புதன்கிழமை அப்பகுதி பெண்கள் தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலை, ஆறுமுகனேரி சோதனைச்சாவடி அருகே திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்து வந்த ஆத்தூா் காவல் ஆய்வாளா் பிரபாகரன், உதவி ஆய்வாளா்கள் ஆறுமுகனேரி மாணிக்கராஜா, மாரியப்பன் உள்ளிட்ட போலீஸாா், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் ஆகியோா் பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.