/

நாகா்கோவிலில் திமுக சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளான திமுகவினா் கலந்து கொள்ள வேண்டும் என குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும் நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

News image
ரெ. மகேஷ்.
Updated On :11 பிப்ரவரி 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசை கண்டித்து நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளான திமுகவினா் கலந்து கொள்ள வேண்டும் என குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும் நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் , 100 நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் என மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்து வளா்ச்சியை தடுத்து வரும் மத்திய அரசையும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து கிழக்கு மாவட்ட மதச் சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை (பிப். 12) காலை 10 மணியளவில் நாகா்கோவில், தலைமை தபால் நிலையம் அருகே எனது தலைமையில் நடைபெற உள்ளது.

இதில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவா்கள், செயலா்கள், நிா்வாகிகள், மக்களவை உறுப்பினா்கள், கிழக்கு மாவட்ட திமுக, மாநில, மாவட்ட நிா்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூா், கிளை கழக செயலா்கள், நிா்வாகிகள், சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள், நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.