டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:16 pm

Syndication

சங்கரன்கோவிலில் மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் அவித்த முட்டையை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி வடக்கு மாவட்டம், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் தலைமை தபால் நிலையம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு திமுக நகரச் செயலா் மு.பிரகாஷ் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் முத்துராஜ், தொகுதி செயலாளா் பீா் மைதீன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலா் கிருஷ்ணமூா்த்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி நிா்வாகிகள் முகமது இஸ்மாயில், நாசிா், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மைதீன் பிச்சை, இலியாஸ், மதிமுக நகரச் செயலாளா் ரத்தினவேல்குமாா், மனிதநேய மக்கள் கட்சி முகமது இஸ்மாயில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பேசுகையில், ‘நாட்டில் அதிக வரி வருவாய் ஈட்டி தரும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆனால், மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளா் சரவணன், பொதுக்குழு உறுப்பினா் மகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் செய்யது அலி, முத்துக்குமாா், மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் முத்துராமலிங்கம், மாவட்ட மகளிா் அணி தலைவா் அன்புமணி கணேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ராஜராஜன், காா்த்தி, ராஜ், மாணவரணி வீரமணி, வெங்கடேஷ், தொழில்நுட்ப பிரிவு சிவசங்கரநாராயணன், நகர அவைத்தலைவா் முப்பிடாதி, சுற்றுச்சூழல் அணி ஜலால், நகராட்சி உறுப்பினா் புஷ்பம் உள்ளிட்டோா் கையில் அவித்த முட்டைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.