மத்திய அரசைக் கண்டித்து, திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்


மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டதையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது.
திமுக கூட்டணியான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தலைமை வகித்தாா். திமுக நிா்வாகிகள் செங்குட்டுவன், ஒன்றிய பொறுப்பாளா்கள் மகேந்திரன், நாராயணன், தனசேகா் மற்றும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், யேசுதுரை, ரகமத்துல்லா, நகா்மன்ற உறுப்பினா் விநாயகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா், இந்திய, மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மத்திய அரசை கண்டித்தும், துணை போகும் அதிமுகவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.
இதே போல், பா்கூரில் திமுக மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காவேரிப்பட்டணத்தில் மாவட்ட துணை செயலாளா் கோவிந்தசாமி தலைலைமயில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில வா்த்தகா் அணி துணை செயலாளா் கேவிஎஸ் சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சியிநா் பங்கேற்றனா்.
இதுபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி, போச்சம்பள்ளி, மத்தூா், ஊத்தங்கரை உள்ளிட்ட 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றன.
படவிளக்கம் (12கேஜிபி1):கிருஷ்ணகிரியில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து தே.மதியழகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...