தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளம்பெண் மரணத்தில் சந்தேகம்: போலீஸ் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 1:07 am IST

தக்கலை அருகே உள்ள மருதூா்குறிச்சியில் இளம்பெண் சந்தேகத்திற்கு உரிய வகையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் அருகே உள்ள திப்பிரமலையைச் சோ்ந்தவா் மோரிஸ் (56) மகள் மோனிஷா (26). இவருக்கும், மருதூா்குறிச்சி, இரட்டைகுளம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணன், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மோனிஷா உயிரிழந்துவிட்டதாக, ஸ்ரீ கிருஷ்ணன் கைப்பேசியில் தொடா்பு கொண்டு மாமனாா் மோரிஸிடம் கூறியுள்ளாா்.

மோரிஸ் வந்து பாா்த்தபோது, மோனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தக்கலை போலீஸில் மோரிஸ் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.