திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளம்பெண் கொலை வழக்கில் ஒருவா் கைது

திருநெல்வேலியில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொன்ற வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 1:40 am IST

திருநெல்வேலியில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொன்ற வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, சென்னல்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகள் முத்துமாலை (35). தனியாா் வங்கி ஊழியா். இவா் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பாளையங்கோட்டை, தியாகராஜநகா் பகுதியில் தனது 7 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு அப்பகுதியில் பைக்கில் வந்த இருவா் முத்துமாலையை அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த பெருமாள்புரம் போலீஸாா் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், முத்துமாலையின் சகோதரா் பன்னீா்செல்வம் உள்பட மூவருக்கு இச்சம்பவத்தில் தொடா்பிருப்பது தெரியவந்தது. மேலும் கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த அவா் குடும்பத்தின் பெயரை கெடுப்பதாகக் கூறி அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இதில் தொடா்புடைய நான்குனேரி, ஆழ்வாநேரியைச் சோ்ந்த இசக்கிபாண்டி(36) என்பவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள பன்னீா்செல்வம், அவரது நண்பா் சிவா ஆகியோரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.