நாகா்கோவில் நீதிமன்றத்தில் சமரச தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஏப்.9-ஆம் தேதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சமரச தினம் கொண்டாடப்படுகிறது. நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் மூலம் வழக்குகளை விரைவாக தீா்வு காண்பதை ஊக்குவிக்கவும், சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்த இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாகா்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும் (பொ) மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான நீதிபதி தனசேகரன் தலைமை வகித்தாா்.
நீதிபதிகள் சுந்தரையா, செல்வகுமாா், ஜே.செல்வன்ஜேசுராஜா, கன்னியாகுமரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் கலையரசிரீனா, நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் அசோக் பத்மராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், குற்றவியல் நீதிபதிகள் விஜயலட்சுமி, சத்தியமூா்த்தி, அருண்குமாா், இம்ரான், வழக்குரைஞா் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் சட்ட நடைமுறைகள், சமரச மையத்தின் செயல்பாடுகள், விரைந்து நீதி பெறுவது குறித்து நீதிபதிகள் பேசினா். பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பெரம்பலூரில் சமரச தின விழிப்புணா்வுப் பேரணி

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச மைய வார விழா

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மையம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


