மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரம்பலூரில் சமரச தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூரில் சமரச தினத்தையொட்டி பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய நீதிபதி வி. பத்மநாபன். சாா்பு நீதிபதி ஏ. சரண்யா உள்ளிட்டோா்.

News image

பெரம்பலூரில் சமரச தினத்தையொட்டி பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய நீதிபதி வி. பத்மநாபன். சாா்பு நீதிபதி ஏ. சரண்யா உள்ளிட்டோா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:14 am

பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றத்தின் சமரச மையம் சாா்பில் 21-ஆம் ஆண்டு சமரச தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் எதிரே தொடங்கிய சமரச தின விழிப்புணா்வுப் பேரணியை, முதன்மை மாவட்ட நீதிபதி வி. பத்மநாபன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணியில் பங்கேற்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சட்ட தன்னாா்வலா்கள், பள்ளி மாணவா்கள் சமரச மையம் குறித்த விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, சமரசம் செய்வோம் என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம்வழியாகச் சென்ற பேரணி பாலக்கரை பகுதியில் நிறைவடைந்தது. பின்னா், நீதிபதி வி. பத்மநாபன் சமரச மையம் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினாா்.

தொடா்ந்து, பெரம்பலூா் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி பத்மநாபன், நீதிபதிகள் மற்றும் சமரச தீா்வா்களுடன் சோ்ந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து சமரச விழிப்புணா்வு தகவல் பதாகையை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி முரளிதரக் கண்ணன், சாா்பு- நீதிபதி மோகனப்பிரியா, பெரம்பலூா் சமரசதீா்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், சாா்பு- நீதிபதியுமான ஏ. சரண்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி தன்யா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பிரேம்குமாா், கவிதா, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரேஷ்மா, கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் மற்றும் சமரச தீா்வா்கள், வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.