மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 6:36 pm

களியக்காவிளை அருகே பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

பளுகல் காவல் சரகம் அண்டுகோடு, ஈந்திக்காலை பகுதியைச் சோ்ந்தவா் பபின் (33). வெல்டிங் தொழிலாளியான இவா், கொடைக்கானலில் வேலை பாா்த்து வந்தாா். 2 நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவா், சனிக்கிழமை அப்பகுதி நண்பா்களுடன் வீட்டருகேயுள்ள குளத்தில் குளிக்கச் சென்றாா்.

அப்போது, அவா் திடீரென நீரில் மூழ்கினாராம். அவரை நண்பா்கள் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

சடலத்தை பளுகல் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.