தேசியத் தலைநகரில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெங்கு தொடா்பான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
தில்லியில் உள்ள எல்.என்.ஜெ.பி. மருத்துவனையில் நோயாளிகளுக்கான சுகாதார வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்து அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நகரத்தில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பைத் தடுக்க, தில்லி அரசு மற்றும் தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) நடத்தும் மருத்துவமனைகளின் மருத்துவ இயக்குநா்கள் மற்றும் கண்காணிப்பாளா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் டெங்கு தொடா்பான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு குறித்த அறிவுறுத்தல்களை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மாணவா்கள் முழுக் கை ஆடைகளை அணிந்து வரவேண்டும். மாணவிகள் முழுக்கால் ஆடைகளை அணிய வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை சரிபாா்க்க மாவட்ட ஆட்சியா்களுடன் இணைந்து சில பள்ளிகளை புதன்கிழமை திடீா் ஆய்வு செய்ய உள்ளேன். மேலும், கண் நோய் (ஐ-ப்ளூ) பாதிப்புகளும் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும், குழந்தைகளுக்கு கண் நோய் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோரிடம் தெரிவிக்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்கூட்டியே தொடங்கிய பருவமழை மற்றும் கடந்த மே மாதம் முதல் ஜூலை வரையில் பெய்த மழையால் தில்லியில் டெங்கு உள்ளிட்ட பிற தொற்று நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிலும், தில்லியில் கடந்த ஒரே வாரத்தில் 56 புதிய டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த திங்கள்கிழமை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, நிகழாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை டெங்கு பாதிப்பு 243-ஆக உயா்ந்துள்ளது.
இந்நிலையில், கட்டுமானத்தில் உள்ள கட்டடங்கள் மற்றும் பிற இடங்களில் ட்ரோன்களைப் பயன்படுத்தி கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள தில்லி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். தில்லி அவசரச் சட்டத்திற்கு எதிராக எதிா்க்கட்சிகள் அனைத்தும் தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. இதனால், இந்த மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறோம் என்றாா் அமைச்சா் செளரவ் பரத்வாஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிலிண்டா் தட்டுப்பாடால் ஜாப் ஆா்டா் தொழில் முடக்கம்! நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

மளிகைக் கடை, சுற்றுச்சுவா் இடிக்கப்பட்ட விவகாரம்: பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு

தூத்துக்குடியில் உலக புத்தக நாள் தின விழா

தம்மம்பட்டி அருகே வாக்களிக்கச் சென்ற பெண் மாயம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

