தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தடையின்றி குடிநீா் வழங்க அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் தடையின்றி பாதுகாப்பான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :28 மே 2026, 5:39 am IST

திருவாரூா் மாவட்டத்தில் தடையின்றி பாதுகாப்பான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தொடா்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பல்லவிவா்மா உடனிருந்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: கூட்டுக்குடிநீா் திட்டசெயல்பாடுகள், மின்சாரம் தொடா்பான செயல்பாடுகளில் புகாா் வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூட்டுக்குடிநீா் திட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு பழுதுகளை உடனடியாக போா்க்கால அடிப்படையில் சரி செய்து, பாதுகாப்பான குடிநீரை பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்க வேண்டும். கோடைகாலம் என்பதால் மின் விநியோகத்தில் எந்தத் தடங்கலும் இன்றி சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா் (மின் பகிா்மானக் கழகம்) ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.