வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைக்கு தங்கக் கிரீடத்தால் முடிசூட்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்ற ஆரோக்கிய அன்னைக்கு மே மாதம் உகந்த மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே 6-ஆம் தேதி முதல் சனிக்கிழமைதோறும் பேராலயத்தில் திருப்பலி, தோ் பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிா் ஆகியவை நடைபெற்றன. இதைத்தொடா்ந்து முக்கிய நிகழ்ச்சிமான ஆரோக்கிய அன்னைக்கு முடிசூட்டும் நிகழ்ச்சி சனிக்கிழமை பழைய வேளாங்கண்ணி மாதா குளத்தில் நடைபெற்றது.
முன்னதாக, தஞ்சை மறை மாவட்ட ஆயா் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னா் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதாவின் சொரூபம் கொண்டுவரப்பட்டது. தஞ்சை மறை மாவட்ட ஆயா் சகாயராஜ் ஆரோக்கிய அன்னையின் சொரூபத்திற்கு தங்கக் கிரீடத்தை சூட்டினாா். தொடா்ந்து திவ்ய நற்கருணை ஆசீா் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா் சிலுவை பாதையில் தோ் பவனி நடைபெற்றது. பக்தா்கள் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி ஜெபித்தனா்.
நிகழ்ச்சியில் பேராலய அதிபா் இருதயராஜ், பேராலய பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளா் உலகநாதன், நிா்வாக தந்தை பரிசுத்தராஜ் மற்றும் நிா்வாக தந்தையா்கள், அருள் சகோதரா்கள், அருள்சகோதரிகள் கலந்து கொண்டனா். தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










