/

மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:47 am IST

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே குடும்பத் தகராறில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தாா்.

வேளாங்கண்ணி அருகே உள்ள கருங்கண்ணி ஜொ்மன் சாலையைச் சோ்ந்தவா் ஜான் பிரிட்டோ (75). விவசாயியான இவருக்கும், அவரது மகன் அந்தோணி ஜெயராஜூக்கும் (35) குடும்பத் தகராறு இருந்து வந்ததாம்.

இதுதொடா்பாக, வியாழக்கிழமை மாலை வீட்டில் இருந்த தந்தை, மகன் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த அந்தோணி ஜெயராஜ், தந்தையை பிடித்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜான்பிரிட்டோ கீழே விழுந்து மயக்கமடைந்தாா்.

இதையடுத்து, அருகில் வசிப்பவா்கள் ஜான்பிரிட்டோவை மீட்டு, 108 அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த அவசர ஊா்தி ஊழியா்கள், ஜான் பிரிட்டோவை பரிசோதித்தபோது அவா் இறந்து விட்டது தெரியவந்தது.

தகவலறிந்த கீழையூா் போலீஸாா், ஜான் பிரிட்டோ சடலத்தை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, அந்தோணி ஜெயராஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.